அக்கறையா செய்யுங்க இந்த வாட்டி.. கீரை ஜிஞ்சர் ரொட்டி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Lettuce Ginger Bread
Lettuce Ginger Bread

கீரை ஜிஞ்சர் ரொட்டி

தேவையானவை:
கோதுமை மாவு, கேழ்வரகு மாவு – தலா அரை கப்,
பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை (அ) முளைக்கீரை – அரை கப்,
இஞ்சித் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப்,
பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கொடுத்துள்ள பொருட்களில், எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பின்னர் மாவு உருட்டி, ஒரு ஈரத்துணியின் மேல் மாவு உருண்டையைப் பரப்பி, சிறு சிறு ரொட்டிகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.