அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: காதில் சீழ், காலரா, காசநோய், கால்வெடிப்பு!

Published:

health tips 1
health tips 1

காதில் சீழ் வடிகிறதா?

பழுத்த எருக்கன் இலையை நெருப்பில் காட்டி வதக்கி சாறு எடுத்து இரண்டு சொட்டுகள் காதில் விடலாம். கற்றாழையை வாட்டி வதக்கி அதன் சாற்றை காதில் விட்டாலும் குணம் தெரியும்.

ஊமத்தை இலைச்சாறு. நல்வெண்ணெய் சம எடை சேர்த்துக் காய்ச்சி காதில் இரண்டு மூன்று சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வடிவது நிற்கும்.

காலரா வராமலிருக்க…

காலரா என்பது ஒரு தொற்று வியாதி, ஊரில் காலரா என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எலுமிச்சை ரசம் காலராவுக்கு சிறந்த தடுப்பு மருந்து. அவ்வப்போது எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தி வர காலரா வராது.

கால் வெடிப்புக்கு…

ஒரு ஸ்பூன் சூடான விளக்கெண்ணெயில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வெடிப்பில் தடவி அரை மணி நேரம் கழித்து காலைக் கழுவ வேண்டும். காலை, மாலை தொடர்ந்து வர சில நாள்களில் குணமடையும்.

கடுக்காய், எள், மஞ்சள், உப்பு இவற்றைச் சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து வெள்ளாட்டின் சிறுநீரில் இந்தப் பொடியைக் கலந்து இரவு படுக்கப் போகுமுன் வெடிப்புகளில் தடவி காலையில் சுத்தம் செய்து விட வெடிப்புகள் மறைந்து விடும்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

காச நோயா?

காச நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் காலை வேளையில் இரண்டு மூன்று பச்சை வெங்காயத்தை நற நறவென்று கடித்து மென்று விழுங்கி வர இரண்டொரு வாரங்களில் நல்ல குணம் தெரியும்.

டி.பி. நோய் உள்ளவர்கள் சீத்தாப்பழம் சாப்பிட்டு வரலாம். நாள்தோறும் மூன்று வேளை பெரிய சீத்தாப்பழம் ஒன்றை சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் தண்ணீர் சாப்பிட வேண்டும். ஏழெட்டு வாரங்கள் தொடர்ந்து சாப்பிட டி.பி. குணமாகும்.

கழுதைப் பாவை நாள்தோறும் சாப்பிட்டு வர காசநோய் குணமாகும்.
வெள்ளைப்பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வர
நாளடைவில் குணமாகும்.

தாளிச்ச பத்திரியை பொடி செய்து 20 குன்றி மணி எடை தேனில் குழைத்து உள்ளுக்கு சாப்பிட காச ரோகம், க்ஷயரோகம் சரியாகும். ஆடாதொடை ரசத்திலும் கலந்து கொடுக்கலாம்.

சப்பாத்திப் பழத்தைக் கொண்டு வந்து முள் போக்கி, தோல் நீக்கி, விதை நீக்கி உள்ளுக்கு சாப்பிட காச இருமலும், இரத்தம் கக்கும் இருமலும் குணமாகும்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

ஆடாதொடை இலையைக் காய வைத்துத் தூளாக்கி நெல் பொரி யுடன் தூள், சம அளவு சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்கலாம். நெல் பொரியின் தூளுக்கு பதிலாக சுக்கு. மிளகு, திப்பிலி இவற்றின் பொடியுடன் தேனும் சேர்த்துக் கொடுக்கலாம். குணமாகும்.

மயில் மாணிக்கம் என்ற மூலிகை மார்கழி, தை மாதங்களில் எங்கும் கிடைக்கும். இதன் இலையை மட்டும் அரைத்து தயிரில் கலந்து சாப்பிட காச நோய் குணமாகும். வெள்ளை ஒழுக்கு உள்ளவர்களும் இதனைச் சாப்பிடலாம்.

Related articles

Recent articles

spot_img