
விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகளால் ஆண்டெனாவை சீர் செய்வதற்காக செல்லவிருந்த விண்வெளிவீரர்கள் அந்த பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மிக அருகில் வந்துள்ளது. ஆகையினால் ஆண்டெனாவை சீர் செய்வதற்காக அங்கு புறப்பட திட்டமிட்டிருந்த விண்வெளி வீரர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளார்கள் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.
ஏனெனில் விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகளால் அங்கு நடந்துசெல்லும் வீரர்களுடைய பாதுகாப்பு உடை டேமேஜ் ஆக வாய்ப்புள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
மேலும் நாசா இதுதொடர்பாக கூறியுள்ளதாவது, ரஷ்யா 2 வாரங்களுக்கு முன்னதாக செயற்கை கோள் ஒன்றை விண்வெளியில் வெடித்து சிதற வைத்துள்ளது.
அவ்வாறு வெடித்து சிதறிய அந்த செயற்கைக்கோள் சுமார் 1700 பெரிய துண்டுகளாகவும், 1,000 த்துக்கும் மேலான சிறிய துண்டுகளாகவும் மாறியுள்ளது.
அந்த செயற்கைக்கோளின் குப்பைகள்தான் விண்வெளியில் தற்போது வலம் வருகிறதா என்பது குறித்து தெளிவான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.