சிறு கழிக்காதீர்; மீறினால் உங்களை ஈரமாக்கி விடுவோம்: ஜெர்மன் நகரில் ‘விநோத பெயிண்ட்’!

Published:

berlin-humburg-urinal-paintபெர்லின் ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் அது மீண்டும் அவர்களையே நனைத்துவிடும் அளவுக்கு சிறுநீரை தெளிக்கச் செய்து விடும் வகையில் சுவரில் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் மக்கள் நாற்றம் இன்றி நிம்மதியாக உலவுகின்றனராம். ஜெர்மனியில் குடிகாரர்கள் குடித்துவிட்டு போகிற போக்கில் பொது இடங்களில் சுவர்களை நனைத்து நாற்றமெடுக்கச் செய்து விடுகின்றனர். இதனால் வெறுத்துப் போன ஜெர்மனியின் ஹம்பர்க் நகர் செண்ட் பாலி மக்கள் ஒரு விநோத வழிமுறையைக் கையாண்டுள்ளனர். செண்ட் பாலியின் அனைத்து சுவர்களிலும் விநோத பெயிண்ட் ஒன்றைப் பூசினர். இந்தப் பெயிண்டானது தண்ணீர் பட்டால் எதிர்த்திசையில் அதை திருப்பி அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டது. அங்குள்ள ஒரு விடுதியில் முதலில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி இப்போது பரவி விட்டது. விடுதியின் அருகில் உள்ள சுவர்களில், ஓர் எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘இங்கு சிறுநீர் கழிக்காதீர். அது மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்’ என எழுதப்பட்டுள்ளது. இதே பெயிண்டை அந்த விடுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் தங்கள் சுவர்களில் அடித்துள்ளனர்.இந்தத் தொழில் நுட்ப பெயிண்டை அமெரிக்க நிறுவனம் கடந்த 2012–ம் ஆண்டு கண்டு பிடித்ததாம். https://www.youtube.com/watch?v=uoN5EteWCH8

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img