லாவோஸில் ஓர் அணை உடைந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்திருப்போரை மீட்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அணை உடைந்ததில் குறைந்தது 100 பேரை காணவில்லை என்றும், ஆயிரகணக்கானோர் அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் ஏரளாமானோர் தங்கள் பொருள் மற்றும் உடைமைகளை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள், உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்கி உதவிடுமாறு அரசு துறைகள் மற்றும் இதர தரப்பினருக்கு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



