ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரரான ரோஜர் பெடரர் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகில் முன்னணி வீரராக வலம் வருகிறார். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே டொரோண்டோவில் அடுத்த மாதம் நடைபெறும் ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க போவதில்லை என திடீரென அறிவித்துள்ள ரோஜர் பெடரர், இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.



