வங்கியில் கல்விக்கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியாத மாணவர்களின் வட்டியை அரசே ஏற்க வேண்டும் அல்லது வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தினார். அதே சமயம், மாணவர்களின் கல்விக்கடனை வாராக்கடன் பட்டியலில் சேர்த்தால் எதிர்காலத்தில், அந்த மாணவர்களால் வங்கியில் எந்தவிதமான கடன்தொகையும் கடன் பெற முடியாமல் போய்விடும் ஆதலால், வராக்கடனில் சேர்க்கக்கூடாது என்று திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். திமுக வைத்த இந்த கோரிக்கைக்கு அதிமுக எம்.பி.க்களும் ஆதரவளித்தனர்.
கல்விக்கடன் மாணவர்களின் வட்டியை அரசே ஏற்க வேண்டும்: திருச்சி சிவா வலியுறுத்தல்
Popular Categories



