அமெரிக்கா: கோவில் சுவரில் வெறுப்பை உமிழும் வாசகம் கண்டு இந்துக்கள் அதிர்ச்சி

hindu-temple-america வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவிலின் சுவரில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு, கெட் அவுட் – வெளியேறு என்ற வாசகத்தை சிலர் எழுதியுள்ளனர். இத்தகைய வெறுப்பை உமிழும் வாசகத்தால், இந்துக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் இந்துக்களும், இந்தியர்களும் இந்தச் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சியாட்டிலில் உள்ள இந்தக் கோவிலின் சுவரில் எழுதப்பட்ட கெட் அவுட் என்ற வாசகத்தை சில விஷமிகள் வேண்டுமென்றே வெறுப்பை விதைப்பதற்காக எழுதியிருப்பதாகக் கருதப் படுகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவில்களில் இது ஒன்று. இப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஸ்னோஹோமிஷ் கவுன்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த வாஷிங்டனைச் சேர்ந்த இந்துக் கோவில்கள் மற்றும் கலாச்சார மையத்தின் அறங்காவலர் குழு தலைவர் நித்யா நிரஞ்சன், ”அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய செயல் விரும்பத்தக்க செயலல்ல. இது நடந்திருக்கக் கூடாது. வெளியேறு என்று யாரும், யாரையும் சொல்ல முடியாது. இது பல்வேறு இனக் குழுக்கள், இடம் பெயர்ந்து வந்தோர் வாழுகின்ற நாடு. இதை யார் செய்தது என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்புகூட இதே போல சிலர் எழுதினர். ஆனால் அப்போது அதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப் படவில்லை. இப்போது செய்திருப்பது யார் என்று தெரியவில்லை” என்றார். 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலின் 2 வது கட்ட கட்டுமானப் பணிகள் அண்மையில் துவங்கின. இந்தச் செயலுக்கு இந்து அமெரிக்க பவுண்டேஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இந்துக் கோவில்கள் அவமதிக்கப்படும் செயல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், இந்தியாவில் மதச் சகிப்புத் தன்மை பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து கூறியது குறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Topics

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories