அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 72-வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதற்கு அடுத்த சில தினங்களில் துப்பக்கிச்சூடு நடைபெற்று 9 பேர் பலியாகி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.