தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள்- பீதியில் மக்கள்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

news sub 158643 - 2026

தஜிகிஸ்தானில் இன்று அடுத்தடுத்து உலுக்கிய 6 நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர் .முதல் நிலநடுக்கம் 6.8 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம்,உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

மத்திய அரசு நாடான தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 5.37 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

முதல் நிலநடுக்கம் 6.8 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து, 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. 4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு. 5வது நிலநடுக்கம் தஜிகிஸ்தான்- சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

புதன் கிழமை இந்தியா உத்தரகாண்ட் மாநிலத்தில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியான பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

இந்த நிலையில் இன்று தஜிகிஸ்தான் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img