அமெரிக்காவுடன் போர்?: ராணுவத்தினர் தயாராக இருக்குமாறு வட கொரிய அதிபர் உத்தரவு

kim-jong-un அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எந்நேரத்திலும் தயாராக இருங்கள் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவுடன் பகை பாராட்டி, அதன் எதிரி நாடாகத் திகழும் தென்கொரியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. தென்கொரியாவுக்கு ராணுவ ரீதியான உதவிகளைச் செய்வதுடன், அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் தென்கொரியப் பகுதியிலும் தங்கியுள்ளனர். தென் கொரியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து, வரும் 3-ம் தேதி அமெரிக்க வீரர்கள் 8 வார கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை அவர் திறந்து வைத்தார். அதன்பின்னர் கிம் ஜாங்-உன், ராணுவ வீரர்களிடையே வீர உரை நிகழ்த்தினார். அப்போது அவர்… “நாட்டை மீண்டும் (தென் கொரியா-வட கொரியா) ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த ராணுவமும் சித்தாந்தப்படியும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும். கடின பயிற்சியில் ஈடுபட்டு ‘பட்டை மற்றும் நட்சத்திரத்தை’ (அமெரிக்க கொடியில் உள்ள சின்னங்கள்) துண்டுதுண்டாகக் கிழித்தெறிய வேண்டும்”. – என்றார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories