நியூ யார்க்: அமெரிக்காவில் மேலும் ஒரு சனாதன தர்ம கோவில் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. அதன் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கெண்ட் நகரில் உள்ள சனாதன தர்ம கோவிலின் ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. கோவில் சுவரில் ஃபியர் (பயம்) என ஸ்ப்ரே பெயிண்டிங்கால் எழுதிவைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது. சனிக்கிழமை அன்று அந்தக் கோவிலில் அமலகி ஏகாதசி கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப் பட்டதால், பக்தர்கள் கோயிலுக்கு அதிகம் வந்திருந்தனர். இது குறித்து, கிங்க்ஸ்-5 டிவி செய்தியை ஒளிபரப்பியது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மற்றும் கெண்ட் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக, கடந்த 15-ம் தேதி சியாட்டில் நகரில் உள்ள போத்தல் இந்து கோவில் சுவரில் ‘வெளியே போ’ என்று எழுதப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக மற்றொரு கோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடரும் இந்த கோவில் தாக்குதல் சம்பவங்களுக்கு அகில உலக இந்து சமுதாய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ராஜன் ஸேத் இந்துக்கள் தேச அளவில் அதிகம் இதனை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர் என்றார்.
அமெரிக்காவில் மீண்டும் இந்துக் கோவில் மீது தாக்குதல் : ஜன்னல் உடைப்பு
Popular Categories


