
உரோகிங்கியா முகமதியரை உடனே வெளியேற்றுக என்று, இலங்கை சிவசேனையின் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மியான்மார் நாட்டில் மேற்கு மாநிலம் அரக்கன். வங்கதேசத்தை ஒட்டிய மாநிலம். வங்கதேசத்து முகமதியர் மியன்மாருக்குள் ஊடுருவினர். கடந்த 100 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சி. அரக்கன் மாநிலத்தில் எண்ணிக்கையில் பெருகினர்.
மியான்மார் புத்த சமயப் பெரும்பான்மை நாடு. புத்தர்களை முகமதியர்களாக்கும் நோக்குடன் மியன்ன்மார் நகரங்களுள் அரக்கன் மாநிலத்தவரான உரோகிங்க முகமதியர் ஊடுருவினர். வணிகக் கடைகளை அமைத்தனர்.
இதனால் கடந்த நூறு ஆண்டுகளாக மியன்மார் புத்தருக்கும் அரக்கன் மாநில உரோகிங்கருக்கும் இடையே தொடர்ச்சியான முரண்பாடுகள் மோதல்கள் கலவரங்கள்.
மியன்மாரின் அரக்கன் மாநிலத்தில் இந்துக்கள் பரந்து வாழ்கின்றனர். அவர்களையும் புத்தர்களையும் முகமதியர்களாக்க முயற்சித்தனர். 2017இல் கலவரம் வெடித்தது. படையினர் தலையிட்டனர். புத்தர்களையும் இந்துக்களையும் மதமாற்ற முயற்சித்த முகமதியர் தமது தலையில் தாமே கொள்ளி வைத்தனர்.
மியான்மார் படைகள் முகமதியரின் மதமாற்ற முயற்சியை முறியடிக்க நடவடிக்கை எடுத்தனர். பத்து இலட்சம் முகமதியர் அகதிகளாக வங்காளதேசத்திற்கு ஓடினர். இந்தியாவுக்கு ஓடினர். தாய்லாந்துக்கு ஓடினர். மலேசியாவுக்கு ஓடினர். இந்தோனேசியாவுக்கு ஓடினர்.
2017க்கு பின்பு அரக்கன் மாநிலம் கலவர பூமி. வீடுகள் எரிந்தன. ஊர்கள் எரிந்தன. முகமதியர்களின் வாழ்வு எரிமலை ஆயிற்று. தொடர்ச்சியாக அரக்கன் மாநிலத்தை விட்டு வெளியேறிய முகமதியர் இப்பொழுது இலங்கைக்குள் புகுந்துள்ளனர்.
இலங்கையிலுள்ள சிலரின் ஊக்கத்தினால் அவர்கள் வந்துள்ளார்கள் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன. மேலும் வருவதற்கான படகுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக இங்குள்ள அவர்களுடைய முகவர்கள் கூறுகிறார்களாம்!
கதிர்காமத்திலிருந்து காங்கேயன்துறை வரையான நீண்ட கிழக்குக் கரையோர ஊர்கள் நகரங்கள் மாநகரங்கள் துறைகள் யாவற்றையும் முகமதிய மயமாக்கும் முயற்சியில் ஒரு திட்டமே மியன்மார் அரக்கன் மாநில முகமதியர்களை இலங்கைக்குள் கொண்டு வருவதாகும்.
இந்த முயற்சியில் ஏற்கனவே அம்பாறை மாவட்டம் 45% முகம்மதியப் பெரும்பான்மை மாவட்டமாகியது. இந்த முயற்சியின் அடுத்த நிலையாக திருகோணமலை மாவட்டம் 45% முகமதியப் பெரும்பான்மை மாவட்டம் ஆகியது. மட்டக்களப்பு முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய மாவட்டங்கள் முகமதியரின் அடுத்த இலக்குகளாக உள்ளன.
வாடைக் காற்றோடு ஐராவதி பிரம்மபுத்திரா கங்கை மகாநதிக் கரைகளில் இருந்து படகில், வங்கக் கடலின் வலசை நீரோட்டத்தோடு பெயர்ந்து வந்த குடியேறிகளால் சிவ பூமி ஆன இலங்கை படிப்படியாக மாறிக் கொண்டு வந்தமை வரலாறு.
அந்த வரலாற்றின் தொடர்ச்சியே மீண்டும் வாடைக்காற்றின் துணையோடு படகில் அரக்கன் மாநில உரோகிங்கியா முகமதியர்கள் 115 பேர் வந்திறங்கி உள்ளனர். மியன்மாரில் இந்துக்களையும் புத்தர்களையும் மதமாற்ற முயற்சித்ததாலேயே இவர்கள் ஏதிலிகளாயினர். அமைதியாக வாழ்ந்து இருந்தால் அங்கேயே தொடர்ந்திருக்கலாம்.
இவர்கள் ஏதிலிகளா மதமாற்றிகளா? என்பதைக் கண்டறிய வேண்டும். சிவ பூமியை அல்லாவின் பூமியாக்கும் முயற்சியின் படிக்கட்டுகளா? இவர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். இவர்களை இலங்கையில் வாழ்வதற்கு ஏற்றுக் கொண்டால் மியன்மாரின் அரக்கன் மாநிலத்தில் நடந்ததே இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் நடைபெறும்.
கதிர்காமம் தொடக்கம் காங்கேயன்துறை வரையுள்ள இலங்கையின் கிழக்குக் கரையோரத்தை முகமதிய மயமாக்கும் தீவிரவாத முகமதிய முயற்சியாளரின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியே உரோகிங்கியா முகமதியரின் வருகை. இலங்கையின் இனப் பரம்பல் விகிதாசாரத்தை மாற்றுவதற்கான முயற்சியின் படிக்கட்டாக அமைய உள்ள முகமதியரின் இந்த வருகையை சைவத் தமிழர்களாகிய நாங்கள் வரவேற்கவில்லை.
115 உரோகிங்கியா முகமதியர்களும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே சைவத் தமிழரின் வேண்டுகோள்.