
ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துனை கேப்டன், டேவிட் வார்னர், பேட்ஸ்மென் கேமரூன் பான்க்ராஃப்ட் மூவரும் தென்னாப்பிரிக்காவில் இருந்து அவர்களது நாடான ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப் படுகின்றனர்.
கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரிதாக சர்ச்சை ஆன நிலையில், ரசிகர்களிடம் இதற்காக வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சூதர்லேண்ட்.
முன்னதாக, தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா போட்டியில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஸ்மித், வார்னருக்கு விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சூதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.
ஜோகன்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் டாரன் லேமேனுக்கு தொடர்பில்லை என்றும், அதனால் அவர் பதவியை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். இந்தப் பிரச்னையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரன் பாங்க்ராப்ட் மூவரும் போட்டியில் இருந்து விலக்கப்படுவதாகவும், அவர்களுக்கான தண்டனை 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் சூதர்லேண்ட் கூறியிருந்தார்.
விலக்கப்பட்ட மூவருக்குப் பதிலாக மேத்யூ ரென்ஷா, ஜோ பர்ன்ஸ், கிளென் மாக்ஸ்வெல் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிவித்த அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் மைக்கேல் க்ளார்க் கூறியுள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.
The truth, The full story, Accountability and Leadership- until the public get this Australian cricket is in deep shit!
— Michael Clarke (@MClarke23) March 27, 2018



