
சென்னை: பிரதமர் மோடிக்கு கண்மூடித்தனமாக ஏன் ஆதரவு பெருகுகிறது என்ற உண்மையை, பத்திரிகையாளர் மாலன் இப்படி வெளிப்படுத்துகிறார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்…
இஸ்லாமிய, கிறுஸ்தவ அடிப்படைவாத அஜெண்டாவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினையாற்றுகிறது. அதனால்தான் ஒரு சராசரி இந்துக்கூட மோடியின் பக்தனாகிறான்” என்கிறார் தாமரை.//
இப்படி ஒரு பதிவு மெசஞ்சரில் வந்தது. இது கவிஞர்… https://t.co/Ja5y5ikROY— maalan (@maalan) March 28, 2018
அதில் அவர் கூறியபடி… இஸ்லாமிய, கிறுஸ்தவ அடிப்படைவாத அஜெண்டாவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினையாற்றுகிறது. அதனால்தான் ஒரு சராசரி இந்துக்கூட மோடியின் பக்தனாகிறான்” என்கிறார் தாமரை.//
இப்படி ஒரு பதிவு மெசஞ்சரில் வந்தது. இது கவிஞர் தாமரை சொன்னதுதானா என்று தெரியவில்லை. அவர் பெரியாரிய நம்பிக்கைகளோடு வளர்ந்தவர். மொழி நடையும் அவருடையது போல இல்லை. அவரது மூலப்பதிவை நான் பார்க்கவில்லை.
ஆனால் இதைச் சொன்னவர் யாராக இருந்தாலும் இதில் ஒரு யதார்த்தம் இருக்கிறது.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக, பாதுக்காப்பாக இருக்கிறோம் என்ற பெயரில் இந்து மதத்தை ஏளனம் செய்வது அலட்சியம் செய்வது, மற்ற் மத்தினரது வன்முறைகள், நம்பிக்கைகள், புராணங்கள் பற்றி அமைதியாக இருப்பது போன்ற செயல்களில் திமுகவும், இடதுசாரிகளும், அறிவுஜீவிகளும் ஈடுபடுவதும்தான் பலரது மோதிக்கான ஆதரவிற்கான காரணமாக இருக்கிறது. – என்கிறார் மாலன்!



