கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகள் நிறைவு; மூன்றாம் இடம் பிடித்த இந்தியா

Published:

gold coast commonwealth games - 2026

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த 11 நாட்களாக நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு அடைந்தன. இந்த முறை,  இந்திய அணி பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது.

போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 59 வெள்ளிப் பதக்கங்கள் 59 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 198 பதக்கங்களை ஆஸ்திரேலிய அணி வென்றது.

இங்கிலாந்து அணி 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களை வென்று இரண்டாவது இடம் பிடித்தது.

இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

பதக்கப்பட்டியலில் கனடா அணி நான்காவது இடத்தையும், நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்தையும் பிடித்தன.

இனி அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img