மலேசிய பிரதமர் தேர்தலில் 92 வயது முன்னாள் பிரதமரான மகதீர் முகமது வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். மலேசியாவில் பிரதமருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் 92 வயது நிறைந்த முன்னாள் பிரதமரான மகதீர் முகமது மீண்டும் போட்டியில் இறங்கினார். கடந்த 1964ம் ஆண்டு அரசியலுக்கு வந்த அவர் அதன்பின் ஆட்சியை கைப்பற்றி மலேசிய நாட்டில் 22 வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளார்.
இந்நிலையில், 64 வயது ரசாக்கின் மீதுள்ள நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளால் மலேசியாவின் மதிப்பு சர்வதேச அளவில் சீர்குலைந்து உள்ளது. இதனால் அவரை எதிர்த்து போட்டியிடும் முடிவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முகமது களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
இதில், முகமது வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் மிக மூத்த பிரதமர் என்ற பெருமையை முகமது பெற்றுள்ளார். இந்த வெற்றியினால் ஒரு கட்சியின் 60 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.



