கென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிலோ மீட்டர் வடமேற்காக உள்ள சோலை நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அந்த மாகாண கவர்னர் லீ, கின்யாஜ்யுகி, அணை உடைந்ததில் வெளியேறிய தண்ணீர், பெரியளவிலான உயிர் மற்றும் பொருள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் தங்கியிருந்த 39 பேரை கென்யா ரெட்கிராஸ் அமைப்பினர் மீட்டுள்ளனர்.



