அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா பே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இதில் குண்டு பாய்ந்து 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.
இது தவிர 10 மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெறித்தனமாக சுட்ட டிமிட்ரியோஸ் பகோர்ட்டிஸ் என்ற மாணவனை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் பள்ளியில் நடக்கும் 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 22 துப்பாக்கிச் சூடுகள் பள்ளிகளில் நடைபெற்றுள்ளன.



