ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரான ஒசாகாவில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுகத்தின் சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை, இதுவரை 3 பேர் இறந்துள்ளனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கூறுகையில், பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகாரிகள், மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப் படவில்லை. முதல் கட்ட தகவலில் 3 பேர் இறந்துள்ளனர்,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்தார்.



