ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள பசுபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.40 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் எதுவும் பற்றி தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.



