சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து இஸ்ரேல் யூத நாடானது, இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. 62 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 55 பேர் எதிராக வாக்களித்தனர்.
இஸ்ரேல் மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இஸ்ரேலிய அரபு மக்கள் ஆவர். இப்போது இஸ்ரேல், யூத நாடு ஆகி விட்டதால் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும் என சொல்லப்படுகிறது.



