பாகிஸ்தானில் பாராளுமன்றத்துக்கும், 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் ஓய்ந்தது.
பாகிஸ்தான் தேர்தலில் பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்), பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் ஆகிய கட்சிகள் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பாராளுமன்ற தேர்தலில் 3,675 பேர், மாகாண சட்டசபை தேர்தல்களில் 8,895 பேர் என மொத்தம் 12,570 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளது.



