கருணாநிதி மறைவுச் செய்தி கேட்டு முல்லைத்தீவில் ஆரவாரம்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
mullaithivu crackers - 2026
தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி செவ்வாய்க் கிழமை மாலை இயக்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி வெளியானதும் முல்லைத்தீவு நகரில் வெடி கொளுத்திப் போட்டு, மக்கள் ஆரவாரம் செய்துள்ளார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணி அளவில் முல்லைத்தீவு நகர் பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடி கொளுத்தி தங்கள் ஆரவாரத்தை வெளிப் படுத்தியுள்ளார்கள்.
இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்குக் கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும், அவர் நினைத்திருந்தால் ஈழத் தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்க முடியம் என்றும் தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒரு காரணத்திற்காக அவரின் இறப்பிற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தி வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளதாக வீதியில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இருந்த போதிலும் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி போற்றத் தக்கது எனவும் வெடி கொளுத்திய மக்கள் தெரிவித்தனர்.
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.