ஹாலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டவரும் பாரமரியமான கிளாசிக் பாடல்களை பாடியவருமான அரேத்தா ஃப்ராங்ளின் (Aretha Franklin) தனது 76 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். கிட்டத்தட்ட 1960-களில் இருந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் இசைத்துறையில் காலத்தால் அழியா படைப்புக்கள் பலவற்றை அளித்த இவரது மறைவு அமெரிக்க மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட பலரும் அரேத்தா ஃப்ராங்ளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.




