தொலைக்காட்சியில் திடீரென்று ஆபாச படம் ஓடியதால் பரபரப்பு

Published:

03 Oct 14 singapur - 2026

சிங்கப்பூரில் கடை ஒன்றில் இருக்கும் தொலைக்காட்சியில் திடீரென்று ஆபாச படம் ஓடியதால், அதைக் கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிங்கப்பூரின் Changi சாலையில் Seng Kee Black Chicken Herbal Soup என்ற கடை உள்ளது. மிகவும் பிரபலமான இந்த கடையில் சாப்பிடுவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது அதே சமயம் இந்த கடையில் இலவச வை-பை மற்றும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு தொலைக்காட்சி இருந்துள்ளது. தொலைக்காட்சியில் ஏதேனும் நிகழ்ச்சிகள், பாடல்கள் போன்றவை போடப்படும்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இப்படி தொலைக்காட்சியில் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்த போது, திடீரென்று ஆபாசபடம் ஒளிபரப்பாகியுள்ளது. அங்கிருந்த வாடிக்கையாளர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஊழியர்களும் பிசியாக இருந்ததால், இதை அவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். தன் பின் சுமார் 12-வினாடி வீடியோ ஓடிய பின்னர் தொலைக்காட்சியை கடையின் உரிமையாளர் பார்த்து உடனடியாக அணைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது இருக்கும் தொலைக்காட்சியில் அதிக வசதிகள் உள்ளது. இதனால் இதை யாரோ இண்டர்நெட்டைப் பயன்படுத்தி, மொபைல் போன் மூலம் ஆபாசபடம் வரும் படி செய்துள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

தற்போது உடனடியாக வை பை நிறுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img