பிரதமர் பதவி விவகாரத்தில் இலங்கை அதிபர் சிறீசேன புது முடிவு!

இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவியை அளிக்க அந்நாட்டு அதிபர் மைத்ரீபால சிறீசேன முடிவு எடுத்துள்ளார்.

இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவியை அளிக்க அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேன முடிவு செய்துள்ளார். இலங்கையில் ரனில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்த கையுடன், அதிபர் சிறீசேன, முன்னாள் அதிபர் ராஜபசவை பிரதமராக அறிவித்தார்.

ஆனால், அதிபரின் முடிவுக்கு  அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மும்முறை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபட்ச தோல்வியுற்றார்.

இந்நிலையில் வரும் 5ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் கூட உள்ளது. அப்போது ராஜபட்சவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும், பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க சிறீசேன முடிவு செய்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரும் குழப்பம் அங்கே ஏற்படக் கூடும் என்று இலங்கை அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். அதிபரின் அறிவிப்பில் ஏதோ சூட்சுமம் உள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.