ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அர்ஜெண்டினாவில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென ரத்து செய்தார்.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. ஆனால், இந்தச் சந்திப்பை டிரம்ப் இரு தினங்களுக்கு முன்பே ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளதால், இந்நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது பலனளிக்காது என வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவித்துள்ளது!