இந்தியா வரி விதிப்பின் ராஜா! அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சீண்டல்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Pakistan Could Be Put On Donald Trumps Immigration Ban - 2026

உலக அளவில் அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.

சர்வதேச அளவில் அதிக வரி விதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஏற்கெனவே குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இப்போது மீண்டும் அதே குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிப்பதாக குற்றம் சாட்டினார்.

ஹார்லே டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத இறக்குமதி வரி விதித்து பின்னர் 50 சதவீதமாக குறைத்தது! அதை மேலும் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அதிபர் ட்ரம்ப் தனது உரையில், இந்தியாவின் வரி விதிப்பை விமர்சிக்கும் விதமாக ‘ இந்தியா வரி விதிப்பின் ராஜா என்கிற வார்த்தைகளை மீண்டும் பயன்படுத்தினார் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.