ஜூலி நாயகியாக… அனிதா எம்.பி.பி.எஸ்., படப்பிடிப்பு தொடக்கம்!

Published:

anitha mbbs - 2026

ஜூலி நாயகியாக நடிக்க, நீட் தேர்வை எதிர்கொள்ள இயலாமல், அரசியல்வாதிகளின் தவறான வழிகாட்டலால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அனிதா எம்பிபிஎஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

மருத்துவப் படிப்பு கனவுடன் படித்து பிளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் அரசியல்வாதிகளின் தவறான வழிகாட்டல்களால் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்தை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அனிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது.

டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்று உருவாகும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நடைபெற்றது. அண்மையில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பிக்பாஸ், ஜல்லிக்கட்டு ஆகியவற்றின் மூலம் பிரபலமாக்கப்பட்ட ஜூலி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் முன்னோட்ட போஸ்டர், வெளியான நாளிலிருந்தே பல்வேறு சிக்கல்களும் எதிர்ப்புகளும் கிளம்பியதாக படத்தின் இயக்குநர் ஜெய் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img