
திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை காலையில் கைது செய்து, ஏசி மண்டபத்தில் வைத்திருந்து, பின் வெளியில் விடாமல், நாமக்கல் திமுக.,வினரைப் போல கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பாஜக., தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
நாமக்கல்லில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக.,வினர் கருப்புக் கொடி காட்னர். அவர்களில் 192 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் உடனடியாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், காலையில் கைது செய்து, ஏ.சி. வசதியுடன் கூடிய திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னர் விடுதலை செய்வதைக் கைவிட வேண்டும் என பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். நாமக்கல் திமுகவினரைப் போல ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார்.
காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும். https://t.co/Gdu6X7u6nQ
— H Raja (@HRajaBJP) June 23, 2018



