நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘மாரி 2’ படத்தின் சண்டைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றபோது திடீரென தனுஷூக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள் பதட்டத்துடன் அவருக்கு ஏற்பட்ட விபத்தால் அவருக்கு எந்தவிதமான பாதிப்பு என்று கவலையுடன் கேட்டுகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தனக்கு சிறிய காயம் என்றும், விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்றும், என்மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நன்றி என்றும் தனுஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தாம்ஸ், ரோபோசங்கர், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
My beloved dear fans … It’s not a major injury and I’m well. Thank you so much for your concern prayers and love. Im forever grateful. Love you all. My pillars of strength.
— Dhanush (@dhanushkraja) June 23, 2018