இதைவிட ஆகச் சிறந்த மூட நம்பிக்கை எதுவும் இல்லை: ஸ்டாலினை கலாய்க்கும் ராம்தாஸ்

இதைவிட ஆகச் சிறந்த மூட நம்பிக்கை எதுவும் இல்லை: ஸ்டாலினை கலாய்க்கும் ராம்தாஸ்

திமுக தலைவர் கருணாநிதி இந்து மதத்தின் மூட நம்பிக்கைகள் குறித்து அடிக்கடி விமர்சனம் செய்துண்டு. ஆனால் அவருடைய குடும்பத்தினர்களே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர்.

அந்த வகையில் நேற்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று யாகம் ஒன்று நடத்தியதாக பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் கூடிஅய் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் ஸ்டாலினின் இந்த யாகம் குறித்து கருத்து கூறிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ”கண்ணாடியை திருப்பி வைத்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்ற அஜித் பட நகைச்சுவைக்கு அடுத்தப்படியாக, ஆகச் சிறந்த மூட நம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது தான்! என்று கூறியுள்ளார். இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.