சென்னையில் போக்குவரத்து விதி மீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து பேசிய அவர், போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இனி பணமில்லை பரிவர்த்தனை முறையில் அபராதம் வாங்கப்படும். விதிகளை மீறுபவர்கள் அபராத தொகையை கிரெடிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங், பேடிம் ஆகியவைகளின் மூலமாக செலுத்தலாம். மேலும் போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளிடமிருந்து பணமாக வாங்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.



