மிக வேகமாக பரவும் விஜய் 62 படத்தின் டைட்டில்

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

panakkaran - 2026
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 62 திரைப்படம் விவசாயம், அரசியல் பின்னணியில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் தலைப்பு ‘பணக்காரன்’ என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் பணக்காரரான விஜய்க்கு வரும் தடங்கல்கள், பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை அவர் எப்படி சமாளித்தார்? என்பதுதான் இந்த படத்தின் கதை  என்பதால் ‘பணக்காரன்’ தலைப்பு இந்த படத்திற்கு முடிவு செய்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் வில்லன்களாக  நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.