நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Published:

adi amavasai tharpanam in vaigai river - 2026

ஆடி அமாவாசையை முன்னிட்டு சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் இறந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

ஆடிஅமாவாசை, புரட்டாசிஅம்மாவாசை,தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மாசாந்தி பெறும்.குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.

இந்த வகையில் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக இன்று அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர், இங்குள்ள கோபால்சாமி அய்யர்,பாலகிருஷ்ண அய்யர் உட்பட விற்பனர்கள் மந்திரம் ஓத எள், பச்சரிசி, வெல்லம்,தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.

இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வைகை வறண்டு இருப்பதால் வைகை கரையில் ட்ரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர் இதை வரக்கூடியவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்துஇங்குள்ள ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அர்ச்சகர் பரசுராமன் பட்டர் சிறப்பு அர்ச்சனை, பூஜை செய்து பிரசாதம் வழங்கினார்.இதே போல் சோழவந்தான் வைகை ஆற்றில் அருகே வரத விநாயகர் கோவிலில் கார்த்திஐயர் மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர். இதனால் திருவேடகத்தில் சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் இரண்டு புறங்களும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மோட்டர் சைக்கிளும் வந்திருந்தவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் ஊர்ந்து சென்றது.சோழவந்தான் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்திலும், ஆடி அம்மா வாசயை ஒட்டி பிதுர்களுக்கு தர்பணம் செய்து வைக்கப்பட்டது.

vaigai river with out water in adi amavasai - 2026

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வறண்ட வைகையால் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் திருவேடகம் வைகை நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கடுமையான சிரமங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்துள்ளனர்.
​ஆடி அமாவாசை நாட்களில் வைகை ஆற்றில் புனித நீராடி, எள் மற்றும் பச்சரிசி கொண்டு பித்ரு கடன் கொடுத்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

இதற்காக அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் திருவேடகம் வைகை நதிக்கரைகளுக்குப் படையெடுத்தனர். ​ஆனால், வைகை நதி முழுவதும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு, மணல் பரப்பாய் பாலைவனம் போலக் காட்சியளித்ததை கண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ​ஆற்றில் தண்ணீர் இல்லாததால் புனித நீராட முடியாமல், வெறும் கைகளுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் .

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அபிஷேக பொருட்களை தண்ணீரில் விட்டு கரைப்பது வழக்கம் ஆனால், தண்ணீர் இல்லாததால் வைகை ஆற்றில் மணல் மீது வைத்து விட்டு செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது. இது போன்ற காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக அறநிலைய துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று இப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img