
கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின், தேவகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு, சரத்பவார், தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பாஜக.,வுக்கு எதிரான போர் என்ற முழக்கம் அனைவராலும் எழுப்பப் பட்டது.
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் மாநில எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் வங்க மொழியில் உரையை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். மேற்கு வங்கத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று கூறிய ஸ்ஆலின், மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தேசவிரோதி என்று முத்திரை குத்துகிறது பாஜக என்றார்.
பா.ஜ.க. அரசு நாட்டு மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது என்று, பா.ஜ.க. அதிருப்தி தலைவர் யஷ்வந்த்சின்ஹா கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே நமது அனைவரின் சிந்தனை, இந்தப் பேரணியின் நோக்கம். இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக இங்குக் கூடியிருப்பதாக, கொல்கத்தா பேரணியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும், பிரதமர் மோடி கூறிய பொய்களில் மிகப்பெரிய பொய் கருப்புப்பணத்தை மீட்பேன் என்பதுதான் என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,மம்தா பானர்ஜியை இரும்புப் பெண்மணி என்று குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டத்தில் பேசியபோது, மத்திய பாஜக அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். மேலும், மக்களிடையே பாஜக விஷத்தை தூவி வருவதாக குற்றம்சாட்டினார்.



