இலங்கையில் 8வது குண்டுவெடிப்பு! கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு அமல்!

Published:

Srilankabombblast - 2026

இலங்கையில் 8வது இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

கொழும்பு புறநகரில் உள்ள டெமடகோடா என்ற இடத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது இன்று காலையில் இருந்து தொடர்ச்சியாக இலங்கை தலைநகர் கொழும்புவிலுமும் அருகில் உள்ள நகர்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து, இலங்கையில் 8வது இடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

கொழும்பு புறநகரில் உள்ள டெமடகோடா என்ற இடத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் 7வது குண்டு வெடித்ததாக தகவல் வெளியான சிறிது நேரத்தில், டெமடகோடாவில் ஒரு குண்டு வெடித்ததாக தகவல் வெளியானது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப் பட்டது. இதை அடுத்து கொழும்பு நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொழும்புவில் ஏற்கனவே தேவாலயங்களில் உள்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இலங்கையின் தேவாலயம், நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 பகுதிகளில் தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img