இலங்கை குண்டுவெடிப்பில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் உயிரிழப்பு!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

sheik haseena boy - 2026

இலங்கை குண்டுவெடிப்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஜயான் (8) உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஜயானின் பெற்றோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

இலங்கையில் ஞாயிறு அன்று இஸ்லாமிய ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளில், வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் பஸ்லுல் கரீம் செலிம் என்பவரின் பேரன் ஜயான் சவுத்ரி (வயது 8) கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஜயான் தனது தந்தை ஹேக் சவுத்ரியுடன் கொழும்பு நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலின் தரை தளத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.

ஜயானின் உடல் நாளை டாக்கா நகருக்கு கொண்டு செல்லப்படும். இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அவனது இளைய சகோதரன் ஜோஹான் சவுத்ரி மற்றும் தாயார் ஷேக் அமீனா ஆகியோர் ஓட்டல் அறையில் இருந்துள்ளனர்.

செலிம், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர். செலிமின் மருமகன் மஷியுல் இலங்கை மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.