டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மனம் இல்லை! உயர் நீதிமன்றம்!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் மதுரை லைஃப் ஸ்டைல்

tiktok - 2026

‘டிக் டாக்’ செயலி ஆபாசமாக உள்ளது, அதற்கு தடைவிதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விஜயகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சீனா பல மொபைல் செயலிகளை தயாரித்து புழக்கத்தில் விட்டாலும் சிலவற்றை தடைசெய்து கண்காணித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் சில மொபைல் செயலிகளை தடை செய்து கண்காணிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்று கேள்வி எழுப்பினர். இதை அடுத்து வழக்கின் விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

tik tok douyin taking the world bytedance feature image 1 - 2026இதனிடையே, டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், நாளொன்றுக்கு 5 லட்சம் டாலர் இழப்பு ஏற்படுவதாக சீனாவை சேர்ந்த பைட்டேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தடை காரணமாக 250க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

டிக்டாக் செயலி பொதுமக்களுக்கு தீமையை விளைவிப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அந்த செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து ஆப்பிள் மற்றும் குகூல் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டது. தடை உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில்,உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இணங்க, இந்த வழக்கு புதன்கிழமை நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.