
பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு தள்ளுபடி விலையில் பொருட்கள் வழங்கி வரும் சீக்கிய வியாபாரி…!
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ஜாம்ருத் பகுதியில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இந்திய வம்சாவளி சீக்கியர் நரஞ்ச் சிங் திறந்து நடத்தி வருகிறார்.
இவர் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனால் தனது கடையில் ரம்ஜான் பண்டிகைக்காக அரசு நிர்ணயித்த விலையை விட குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவரது இந்த செயலால் அப்பகுதியல் உள்ள முஸ்லீம்கள் அவரை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனா்.



