புத்தாண்டில் ஒன்றிணைய இலங்கை அதிபர் அழைப்பு

செவ்வாய்க்கிழமை இன்று தேசிய புத்தாண்டு இலங்கையில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதிபர் மைத்ரீபால சிறீசேன, மக்களிடையே ஒற்றுமையும் இணக்கமும் ஏற்படுவதற்கான முக்கியத்துவத்தை உணர்த்திப் பேசினார். பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அதிபர் சிறீசேன அளித்த வாழ்த்துச் செய்தியில், நமது கலாசார, மத பாரம்பரியத்துக்கு நாம் முக்கிய இடத்தைக் கொடுத்து, புத்தாண்டில் அதற்கான சமூக மதிப்புகளைக் காட்டி, இலங்கையர்கள், தங்கள் பழைமையான மனிதப் பண்புகள், வாழ்வியல் மரபுகளை இன்றைய நாளில் உரு ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். ஒற்றுமையை எதிர்நோக்கி அவர் வெளியிட்ட புத்தாண்டுச் செய்தியை ஜிங்குவா செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி வெளியிட்டிருந்தது.