October 24, 2021, 10:05 pm
More

  ARTICLE - SECTIONS

  உலக அரங்கில் தலைகுனிந்து நின்ற இங்கிலாந்து!

  இங்கு யார் ஜெயித்தார்…. யார் தோற்றார் என்பதை காட்டிலும்…. இங்கிலாந்து அணிக்கு கிடைத்த மூன்று பெனால்டி வாய்ப்பை கோலாக

  england soccer violence - 1

  மிருகம் வெளியே வந்தது!

  உலக அளவில் நடைபெறும் விளையாட்டு திருவிழாக்களில் கால்பந்தாட்டம் மிக முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது. நேற்றைய தினம் யூரோ 2020 இறுதிச்சுற்று விம்ப்ளேயில் நடந்தது. ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய போட்டி முடிந்ததென்னவோ….கலவரத்தில்!

  இங்கு யார் ஜெயித்தார்…. யார் தோற்றார் என்பதை காட்டிலும்…. இங்கிலாந்து அணிக்கு கிடைத்த மூன்று பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றத்தவறிய மூன்று பேர் மீது பார்வையாளர்களின் கோபம் திரும்பியது…

  இது விளையாட்டில் இயல்பான ஒன்றுதான் என்றபோதிலும் அது வெள்ளையினம் தான் உயர்த்தி….. நம் இங்கிலாந்து நாட்டவர்களாக இருந்திருந்தால் நாம் இன்று தோற்றுப் போய் தலை குனிந்திருக்க வேண்டியதில்லை என்கிற அசிங்கமான சிந்தாந்தமாக மாறி….. பயங்கர தாக்குதலாக முடிந்தது.

  கடைகள் சூறையாடப்பட்டன…. நகர வீதிகள் போர்க்களம் போலானது. இங்கிலாந்தில் வசித்துவரும் பன்னாட்டவரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்… குறிப்பாக கருப்பின மற்றும் கலப்பின மக்கள்!

  எவ்விதம் அவர்கள் மற்றவர்களுக்கு அடையாளம் கொடுத்து இருக்கிறார்கள் பாருங்கள்…. கருப்பினமாம்! கலப்பினமாம்! விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்….. இறுதி சுற்று வரை கொண்டு வந்தவர்கள் அதில் வெல்லும் வாய்ப்பு மட்டுமே தவற விட்டுயிருக்கிறார்கள். ஆனாலும் விளையாடும் அந்த கணம் தான் சாகஸம்…இதில் இனம் எங்கு வந்தது?????? யாருக்கும் தெரியவில்லை….. ஆனால் வெளியே தெரிந்தது இங்கிலாந்தின் கோரமுகம்.

  முகம் சுளிக்கவைக்கும் அந்நாளைய அடக்குமுறை கோரத் தாண்டவ முகம் இத்தனை காலத்திற்கு பிறகும் அதன் எச்சம்… அவர்கள் மனதில் அடியாழத்தில் ஆங்காரமாக ஒளித்துக்கொண்டு இருந்தது தலைமுறைகளை தாண்டி வெளியே வந்துவிட்டது. இப்படி தான் சமூக ஊடகங்களில் பலர் இங்கிலாந்தை கிழித்து தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்…..

  பலமான தாக்குதலுக்கு உள்ளான பலரும் இட்டாலியை சேர்ந்தவர்கள் என்றும் செய்தி வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  இந்த இடத்தில் யார் இதனை கொளுத்தி போட்டார்கள் என்று தெரியவில்லை….. இங்கிலாந்திற்கு கால்பந்து மாதிரி, இந்தியாவிற்கு கிரிக்கெட். உலக கோப்பை போட்டிகளின் போது சென்னை மற்றும் பெங்களூரூ ஸ்டேடியங்களில் இந்திய அணி விளையாடி தோற்ற சமயத்தில் கூட பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பலரும் எழுந்து நின்று கைதட்டி விட்டு சோகதத்துடன் வெளியேறியிருக்கிறார்கள். இது அந்த சமயத்தில் ஜெயத்தவர்கள் அசந்தே போயிருக்கிறார்கள்…. நாங்கள் எங்கள் தேசத்தில் இருக்கிறோமோ என்று ஒரு கணம் திகைத்து போனோம் என்று நெக்குறுகி நெகிழ்ந்து போயிருகிறார்கள்.

  அது அந்த விளையாட்டிற்கு அவர்கள் (இந்தியர்கள்) கொடுத்த கௌரவம்.

  அவர்களுக்கு கல்வி கொடுத்தோம்.. எல்லாம் கற்று கொடுத்தோம்.. என மார் தட்டும் நாம் இன்று தோற்றதற்காக கலவரம் செய்கிறோம் ஊரை சூறையாடி கொண்டு இருக்கிறோம்…. வெட்கி தலை குனிய வேண்டும் நாம் என ஊடகங்களில் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள். இதுவுமே ஓர் வகையில் வன்மமாகவே வெளிப்பட்டு இருக்கிறது.

  சுமார் 45 ட்ரில்லியன் கணக்கில் கொள்ளை அடித்து சென்றவர்கள் பேசும் பேச்சு எப்படி இருக்கிறது பாருங்கள் இது.

  கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிடைத்து கொண்டே இருக்கும் குழந்தைகளின் எலும்பு கூடுகள்…. அங்கு உள்ள மக்களை தூண்டிவிட்டுள்ளது‌….. அங்கு இருந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் சிலையை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.. பல சர்ச்சுகள் தேடிப் பிடித்து கொளுத்தி கொண்டு வருகிறார்கள்….

  இந்த நிலையில் இந்த புதிய சர்ச்சை பேச்சு சூட்டை கிளப்பி வருகிறது அங்கு. பல இடங்களில் கடும் கண்டனங்களை இந்தியர்களும் பதிவு செய்து வருகிறார்கள்… யார் கல்வி கொடுத்தது..??? யார் கற்றுக் கொடுத்தது…??? என சுரண்டி கொழுத்தவர்களுக்கு எதிராக கொதித்தெழுந்து கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.

  ஓர் கால்பந்தாட்டத்தின் இறுதிச்சுற்று.. இந்தியர்களின் கால் தூசுக்கு காண மாட்டார்கள் இவர்கள் என சொல்லாமல் சொல்லி சென்றுவிட்டது. இருள் சூழ்ந்த இருண்ட முகங்களோடு இங்கிலாந்து இன்று உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிறது.

  • ஸ்ரீ ராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-