பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் பசுவை தன்னுடைய பைக்கில் முன்புறம் அமர்த்தி ஒட்டிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
பெஷாவரில் உள்ள கிராமப்புறம் ஒன்றில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், பசுவை பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
பசுவும் அந்த இருசக்கர வாகனத்தில் மிகவும் சாதுவாக அமர்ந்திருக்க எந்த பதற்றமும் இன்றி அந்த நபர் இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி சென்றார். ஒரு குழந்தையை போல பசு அமர்ந்து வந்ததை சாலையில் சென்ற அனைவரும் பார்த்து ரசித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இத்தகைய செயல் சட்ட விரோதமானது. மிருகத்தை வாகனத்தில் அழைத்து செல்வது மிருகவதைக்கு ஈடானது என எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தானில் தானில் மட்டுமே இது போன்று நடக்கும் எனவும், இது தான் உண்மையான கவ்பாய் எனவும், அற்புதமான பைக் சவாரிக்கு உங்கள் பசுக்கள், பன்றிகள், கழுதைகள் மற்றும் குரங்குகள் கொண்டு வாருங்கள் பாகிஸ்தான் வரவேற்கிறது எனவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.