
வங்காளதேசத்தில் இஸ்லாமிய கல்வி நிலையத்தில் பயின்று வந்த இளபெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் கூட்டாளிகள் 16 பேர் கைது…!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உதவி பெறும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களான மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்காளதேசத்தில் இஸ்லாமிய கல்வி நிலையத்தில் படித்து வந்த 19 வயதான நஸ்ரத் ஐகான் ரஃபி என்ற இளம்பெண் தன்னுடைய ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், வழக்கை திரும்பப் பெறுமாறு நஸ்ரத் ஜகான் ரஃபிக்கு ஆசிரியர் தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கடி, மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நஸ்ரத் ஜகான் ரஃபி புகாரை வாபஸ் பெறவில்லை. இந்நிலையில் அவரை கொலை செய்யுமாறு ஆசிரியர் ஆட்களை ஏவியுள்ளார்.
அவர்கள் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நஸ்ரத் ஜகான் ரஃபி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால் சுமார் 80% தீக்காயம் அடைந்த நஸ்ரத் ஜகான் ரஃபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் போலீசார் 17 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவத்தை அடுத்து வங்காளதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனையை வழங்க வேண்டும், மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் அமைப்புகள் போராட்டம் மேற்கொண்டது.
பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மிரட்டல் காரணமாக பதிவு செய்யப்படுவது இல்லை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருபோதும் நியாயம் கிடைப்பது இல்லை என பெண்கள் அமைப்பினர் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக அரசு நிதியுதவி பெறும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களான மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச மதரஸா கல்வி வாரியத் தலைவர் சாயிப் உல்லாஹ் பேசுகையில், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக அரசு நிதியுதவி பெறும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களான மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் அனைவரும் பெண் ஆசிரியர்கள் மூலமே தங்களது தலைமை கல்வி நிர்வாகத்தை எதிர்கொள்வார்கள். கண்காணிப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்காக பள்ளிகள், கல்லூரிகளில் கமிட்டி ஏற்படுத்த வேண்டும் என்றும் வங்கதேசம் உத்தரவிட்டுள்ளது.
வங்காளதேசத்தில் கடந்த வருடம் மட்டும் 950 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏப்ரலில் மட்டும் 18 வயதுக்கு குறைவான 39 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மாணவி நஸ்ரத் ஜகான் ரஃபி கொலை செய்யப்பட்ட விவகாரம் வங்கதேசத்தில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள அந்நாட்டு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



