இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

உலகம் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

england team wc - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிரது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியிலாவது இங்கிலாந்து அணி வென்று, முதல்முறையாக கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிரிக்கெட்டைக் கண்டறிந்த நாடு என்று பெருமை பெற்ற இங்கிலாந்து நாட்டு அணி இதுவரை ஒரு முறைகூட உலகக் கோப்பையைக் கைப்பற்றியதில்லை. இந்த முறை மிகப் பெரும் வாய்ப்பு அதற்கு கிடைத்திருக்கிறது. இந்த முறையாவது அது கோப்பை வெல்ல வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.