தற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா!

அடடே... அப்படியா? கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

madhumitha kamal1 - 2026 பிக் பாஸ் சீசன் 3 வீட்டில் இருந்து தப்பிப்பதற்கு வழி பார்த்த நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டாராம்.  பிக்பாஸ் போட்டியாளர்களில் மக்களிடம் நல்ல ஆதரவு பெற்றிருந்த போட்டியாளராக இருந்தார் நடிகை மதுமிதா!

கடந்த வாரம் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் குறித்து சக போட்டியாளர்களிடம் கமல் நடத்திய கருத்துக்கணிப்பில் நடிகை மதுமிதா மூன்றாவது இடம் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியின் தொடங்கிய தொடக்க காலத்தில் தமிழ் பொண்ணு குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் மதுமிதா.

அப்போது மதுமிதாவுடன் ஓரிருவருக்கு இடையே  பெரிய தகராறு ஏற்பட்டது! அதன் பிறகு சண்டைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டு சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தவர், கடந்த வாரம் மீண்டும் சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்

madhumitha kamal - 2026பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் பெண்களை அடிமையாக நடத்துவதாக கூறி கவின் இடம் சண்டை போட்டார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்தனர்! அதோடு இந்த வார தலைவருக்கான போட்டியில் மதுமிதா கள்ள ஆட்டம் நடத்தியதாகவும் புகார் எழுந்தது!

இப்படி சர்ச்சைகளில் சிக்கி இருந்த நேரத்தில் மதுமிதா அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார். வாக்குவாதத்தின் போது தனது வாக்கை நிரூபிக்க இத்தகைய முடிவை தான் எடுத்ததாக மதுமிதா கமலிடம் கூறியுள்ளார்

அவர் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது அவர் கையிலிருந்த கட்டு மூலம்  வெளித் தெரிந்துள்ளது. ஆனாலும் வெற்றியாளர் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருந்த ஒரு போட்டியாளர் இவ்வாறு பாதியில் வெளியேறியது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கமலஹாசன் மதுமிதாவின் கூறியுள்ளார்!

எப்படியோ பிக்பாஸ் வீட்டு கொடுமையில் இருந்து மதுமிதா தப்பித்தாரே…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.