பால்கனியில் யோகா செய்த பெண்! அடுத்து நேர்ந்த விபரீதம்!

உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
palkani - 2026

மெக்சிகோவின் நியூவோ லியோன் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் அலெக்ஸா தெரசா இவருக்கு வயது 23. கல்லூரியில் படிக்கும் இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது தளத்தில் உள்ள பால்கனியில் யோகா பயிற்சியினை மேற்கொண்டார்.

அப்போது, அவர் தன்னுடன் இருந்த தோழியிடம் தான் இப்பொழுது ஒரு கடினமான யோகாவை செய்து காட்டுவதாகக் கூறி, பால்கனியின் விளிம்பில் உள்ள கண்ணாடியை பிடித்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கியுள்ளார்.

அப்போது அவரது தோழி அவர் யோகா செய்வதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். சில வினாடிகள் தலைகீழாகத் தொங்கிய படி இருந்த அலெக்ஸா தெரசா, எதிர்பாராத வகையில் பிடி நழுவி கீழே விழுந்தார்.

சுமார் 80 அடி உயரத்தில் இருந்து, தரையில் விழுந்ததில் தெரசாவின் 2 கால்களும் முறிந்தன. மேலும் அவரது கைகள், முதுகு, இடுப்பு, தலை உள்ளிட்ட இடங்களில் பலமான காயங்கள் ஏற்பட்டன.

ஒட்டுமொத்தமாக அவரது உடலில் 110 எலும்புகள் உடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.