தாமரைத் தண்டு குழம்பு :

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
thamarai thandu - 2026

தாமரைத்தண்டு குழம்பு

தேவையானவை:

தாமரைத்தண்டு – கால் கப்,

புளி – 50 கிராம்,

தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,

பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,

நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

kuzhambu 2 - 2026

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, தாமரைத் தண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, கெட்டியாகக் கரைத்து வடிக்கட்டிய புளிக் கரைசல் விட்டுக் கலந்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம் போட்டு நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்க… தாமரைத் தண்டு குழம்பு ரெடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.