நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கூட்டம் காசிநாதர் கோயில் கோபுர திருப்பணி கமிட்டி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு எம் கே வாசுதேவ ராஜா தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன் மற்றும் மணி குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார்.
தாமிரபரணி புஷ்கரணி 11 நாள் அன்னதானத்தில் மற்றும் சேவை புரிந்த ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கார்த்திகை பதினெட்டாம் தேதி கன்னி பூஜை சார்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
சபரி ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு பெண்கள் பத்து வயது முதல் 50 வயது வரை இருமுடி மற்றும் சபரிமலை அழைத்துச் செல்வதில்லை என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது
சபரிமலை செல்லும் பக்தர்கள் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அலுவலகத்தில் அன்னதானத்திற்கு இரு முடி கட்டில் உள்ள காணிக்கையை அங்கு வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இன்று நடந்த தாமிரபரணி புஷ்கரணி பாராட்டு விழா கூட்டத்தில் செயலர் சண்முகம் ஏற்பாட்டில் அன்னதானத்தில் சேவை புரிந்த உறுப்பினர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது
சேவா சங்க தலைவர் எம் கே வாசுதேவ ராஜா, செயலர் சண்முகம் கௌரவத் தலைவர் ராமசுப்பிரமணியன், குமாரசாமி குருசாமி மணி குருசாமி முத்தையா குருசாமி சிவராமன் ஆண்ட பெருமாள் ரமணன் நாராயணன் ராதாகிருஷ்ணன் ரமா நந்தன் பஜ்ஜி பரமசிவன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர் நலச் சங்க செயலாளர் குமாரசாமி நன்றியுரை ஆற்றினார்.




